மருத்துவர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று

Report Print Steephen Steephen in சமூகம்
445Shares

கம்பஹா - வத்துப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் மருத்துவர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவர்களுக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதியானதை அடுத்து வைத்தியசாலையின் 10ஆம் இலக்க விடுதியில் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகம் கூறியுள்ளது.

மருத்துவர், இரண்டு தாதியர், மூன்று ஊழியர்கள் மற்றும் கணக்காய்வுப் பிரிவின் அதிகாரி ஆகியோருக்கே கொரோனா தொற்றியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுவதை தடுக்க தம்மிக்க பண்டார என்பவர் தயாரித்த பாணி மருந்து முதலில் இந்த வைத்தியசாலையில் உள்ள கொரோனா தொற்றாளர்களுக்கே வழங்கப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.