காத்தான்குடியில் டெங்கு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Report Print Rusath in சமூகம்
20Shares

மட்டக்களப்பு - காத்தான்குடியில் டெங்கு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகரசபை பிரிவில் டெங்கு பரவுவதை தடுக்கும் பொருட்டு காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் விஷேட கூட்டமொன்று நடைபெற்றிருந்தது.

இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் டெங்கு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு, அதிகாரிகள் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தொண்டர்கள், பொலிஸார், காத்தான்குடி பிரதேச செயலக அதிகரிகள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் பிரதிநிதிகள் வீடு வீடாகச் சென்று வீடுகள் சுற்றுப்புறச் சூழல் வீட்டுக்கிணறு என்பவற்றை பார்வையிட்டதுடன் டெங்கு பரவக் கூடிய இடங்கள் துப்பரவு செய்யப்படாத இடங்களை அடையாளம் கண்டு உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கி டெங்கு தொடர்பான விழிப்பூட்டும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த வேலைத்திட்டம் தொடர்ந்து நான்கு தினங்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.