தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிரதேச சபைத்தவிசாளர் த.தியாகமூர்த்தி பதவி இழக்கின்றார்.
20 உறுப்பினர்களைக் கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளதுடன், 8 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அதனடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 4 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் இருவர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் 4 பேர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினர் என 12 பேர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.