திருகோணமலை பகுதியில் விபத்துக்குள்ளான விமானம்! உயிரிழந்த விமானி குறித்து வெளியாகியுள்ள தகவல்

Report Print Murali Murali in சமூகம்
1220Shares

திருகோணமலை - சீனன்குடா விமானப்படைத்தளத்தில் இருந்து விமானியொருவருடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளான நிலையில், விமானி உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த விமானி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேகாலை – ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதான விமானியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விமானப்படை தெரிவிக்கின்றது.

கேகாலை மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை விமானப்படையில் இணைந்துக்கொண்டுள்ளார்.

இந்த விமானம் திருகோணமலை – சீனகுடா விமானப்படை தளத்திலிருந்து சுமார் 1 மணியளவில் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

விமானம் பயணத்தை ஆரம்பித்து சுமார் 15 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த ஆண்டு இலங்கை விமானப்படை சம்பந்தப்பட்ட இரண்டாவது விமான விபத்து இதுவாகும்.

கடந்த ஜனவரி 3 ஆம் திகதி ஹப்புதலை பகுதியில் Y12 என்ற விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது.

இதன் போது இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


you may like this video...