நான் காளி, நான் உங்கள் தாய்! தேரர் முன்னிலையில் கேகாலை ஆயுர்வேத வைத்தியர் ஆவேசம்

Report Print Murali Murali in சமூகம்
1906Shares

கொரோனா வைரஸிற்கான மருந்தினை தயாரித்துள்ளதாக தெரிவித்து வரும் கேகாலை வைத்தியர் தம்மிக்க பண்டார பௌத்த தேரர் முன்னிலையில் நான் காளி என ஆவேசப்பட்டுள்ளார்.

அனுராதாபுரத்தில் உள்ள அட்டமஸ்தானயவின் தலைமை மதகுரு முன்னிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். கேகாலை வைத்தியர் நேற்று அனுராதபுர ஜய ஸ்ரீமாகபோதிக்கு செல்ல முயன்றுள்ளார்.

அவருக்கு அதற்கான அனுமதி மறுக்கப்பட்டவேளை அவர் தான் அங்குள்ள ஸ்ரீமாகபோதிக்கு தனது மருந்தினை வழங்கி வழிபாடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கேகாலை மருத்துவர் தலைமை தேரரிடம் நான் காளி, நான் உங்கள் தாய் என தெரிவித்துள்ளார். உலகை பாதுகாக்கவே மருந்தினை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Like This Video...