உயர்நீதிமன்றில் ஏற்பட்ட தீவிபத்திற்கு மின்சார ஒழுக்கு காரணமாக இருக்காது! தீயணைப்பு துறை தலைவர்

Report Print Ajith Ajith in சமூகம்
84Shares

உயர்நீதிமன்ற கட்டடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீப்பரவலுக்கான காரணம் மின்சார ஒழுக்கு அல்ல என்று கொழும்பு தீயணைப்புத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

மின்சார ஒழுக்குக்காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்க முடியாது என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதனை உறுதிப்படுத்த அரச ஆய்வாளரின் அறிக்கைக்காக காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் பணிபுரியும் துப்புரவு ஊழியர் ஒருவரால் வீசப்பட்ட சிகரெட் துண்டிலிருந்து இந்த தீ ஆரம்பித்திருக்க முடியுமா என்பது உட்பட பல விசாரணைகளை புலனாய்வாளர்கள் ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் அடிப்படையில் குற்றவியல் புலனாய்வுத் துறை இதுவரை துப்புரவு பணியாளர்கள் உறுப்பினர்கள் உட்பட 57 பேரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.

இந்த தீ விபத்தினால் நீதிமன்ற பதிவுகள், அலுவலகங்கள் அல்லது நீதிமன்ற அறைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.