கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகை பணம்!

Report Print Steephen Steephen in சமூகம்
806Shares

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பெருந்தொகையான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

300 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் மாலபை மற்றும் கடுவலை பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகம் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 5 கோடியே 80 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.