பேருவளை மற்றும் காலியில் 5 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில்

Report Print Steephen Steephen in சமூகம்
54Shares

பேருவளை - மக்கோன பிரதேசத்தில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

மக்கோனா கிழக்கு, மேற்கு மற்றும் அக்கரமலே ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பிரதேசங்களில் நேற்றைய தினம் 50க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 361 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை காலி இந்துருவ சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவில் துன்துவ கிழக்கு, துன்துவ மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பிரதேசங்களில் நேற்று 41 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.