பிரபல வெதுப்பக உணவு தயாரிப்பு நிறுவனத்தில் 23 பேருக்கு கொரோனா

Report Print Steephen Steephen in சமூகம்
2601Shares

கொழும்பு இரத்மலானையில் அமைந்துள்ள பிரபல வெதுப்பக உணவு தயாரிப்பு நிறுவனத்தில் பணிப்புரியும் 23 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இந்த நிறுவனத்தில் பணிப்புரியும் சுமார் 50 பேருக்கு இன்று நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பேக்கரி உணவு பொருட்கள் பொதி செய்யப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிறுவனத்தின் களஞ்சியத்தில் பணிபுரியும் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.