அமைச்சரவை செயலகத்தில் பணிபுரியும் நான்கு அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வாரப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக அமைச்சரவைக் கூட்டங்களை இணையத்தளம் வழியாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அமைச்சர்கள் சிலர் இணையத்தளம் வழியாக அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவது சம்பந்தமாக அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.