கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டில் 886 வீதி விபத்துக்கள் பதிவு

Report Print Yathu in சமூகம்
15Shares

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் 886 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், வீதி விபத்துக்களால் 11 உயிரிழப்புக்கள் பதிவாகியிருப்பதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நவரத்தினம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் வீதி விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பில் கிளநொச்சியை ஒரு முன்னோக்கிய மாவட்டமாக கொண்டு செல்ல வேண்டுமென்பதற்கான ஆலோசனைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டபோது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த வருடத்தில் மாத்திரம் 886 வீதி விபத்துக்கள் பதிவாகியிருக்கின்றன. இதனால் 11 உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, அதிகரித்த வேகம் மற்றும் பளை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் தூர இடங்களிலிருந்து வருகின்ற வாகனங்களின் சாரதிகளின் தூக்கம் என்பவற்றினால் இந்த விபத்துக்கள் குறிப்பாக கிளிநொச்சி நகரத்திற்குள்ளேயே டிப்பர் வாகனங்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் அதிகரித்த வேகத்தில் பயணிக்கின்றன.

வேக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் எழுமாற்றாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கிளிநொச்சி பொதுச்சந்தையில் 10 பேரின் மாதிரிகளும், பூநகரிப் பிரதேசத்தில் 185 மாதிரிகளும் பெறப்பட்டு ஆய்வுகளுக்கான அனுப்பியிருந்தபோது தொற்று இல்லை என முடிவுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டதைப் பொறுத்தவரையில் ஆய்வுகூட வசதிகள் பெரும் நெருக்கடியாக உள்ளன.

சுகாதாரத்துறையினர் இந்த நோய்த்தொற்று தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைள் மற்றும் தனிமைப்படுத்தல்களுக்கு எதிராக சில உயரதிகாரிகளின் அழுத்தங்கள் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.