போலி விசாவில் பிரான்ஸ் செல்ல முயற்சித்த வவுனியா யுவதி கைது

Report Print Steephen Steephen in சமூகம்
559Shares

போலியாக தயாரிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டின் வதிவிட விசா அனுமதியை பயன்படுத்தி கட்டார் நாட்டின் ஊடாக பிரான்ஸ் செல்ல முயற்சித்த இலங்கை யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இந்த யுவதியை கைது செய்துள்ளனர்.

வவுனியாவை சேர்ந்த 21 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யுவதி இன்று அதிகாலை 3.15 அளவில் கட்டார் நாட்டின் தோஹா நோக்கி செல்லவிருந்த கட்டார் விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இந்த யுவதி காட்டிய பிரான்ஸ் நாட்டின் வதிவிட விசா குறித்து சந்தேகமடைந்த கட்டார் விமான சேவையின் அதிகாரிகள், யுவதியின் ஆவணங்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

யுவதியை கைது செய்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவரை மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.