புதிதாக தனிமைப்படுத்தப்படும் மற்றும் விடுவிக்கப்படும் இடங்கள் தொடர்பான முழுமையான விபரம்

Report Print Sujitha Sri in சமூகம்
321Shares

நாளைய தினம் காலை ஐந்து மணி தொடக்கம் மேலும் இரு பொலிஸ் பிரிவுகளின் சில பகுதிகள் புதிதாக தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் பேலியகொடை பொலிஸ் பிரிவின் காஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நெல்லிகாஹாவத்தை மற்றும் புரண கொடுவத்தை ஆகிய பகுதிகளும், கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் வெவேகொடை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஸ்ரீ ஜயந்தி மாவத்தை பகுதியும் தனிமைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்படும் மற்றும் நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள் தொடர்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.