மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள கட்டடத்தில் பாரிய தீ பரவல்

Report Print Rusath in சமூகம்
26Shares

கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கட்டடத்தில் இன்று மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் கட்டடத்தின் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த கட்டடம் கடற்றொழில் திணைக்களத்தின் ஐஸ் தொழிற்சாலை பகுதியாகும் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இக்கட்டிடத்தின் ஒரு பகுதியே தீ பரவலால் எரிந்து நாசமாகியுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை தீயணைக்கும் படையினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரும், படையினரும் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மாநகர மேயர் ரி.சரவணபவன் மாநகர ஆணையாளர் எஜ்.தயாபரன் உள்ளிட்ட அதிகாரிகளும் குறித்த தீ விபத்து பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.