கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்வு

Report Print Kamel Kamel in சமூகம்
85Shares

இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் ஐந்து கொவிட் மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

1. பனாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் கடந்த 18ம் திகதி முல்லேரியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கொவிட் ,நிமோனியா மற்றும் இரத்தம் விசமாகியது ஆகிய காரணிகளினால் இவர் மரணித்துள்ளார்.

2. கொழும்பு 8 பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான ஆண் ஒருவர் கடந்த 17ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.கொவிட், நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.

3. கொழும்பு 12 பிரதேச்தைச் சேர்ந்த 71 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புற்று நோய் மற்றும் கொவிட் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

4. கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான ஆண் ஒருவர் நேற்றைய தினம் வெலிசறை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் மற்றும் சுவாசப்பை பிரச்சினையினால் இவர் உயிரிழந்துள்ளார்.

5. பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான ஆண் ஒருவர் நேற்றைய தினம் ஹொரண வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் மற்றும் இருதய நோய் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.