பேருந்தொன்றுக்குள் ஒருவரை கண்டிப்பதற்காக ஏறிய ஒருவரும், அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலாங்கொடையின் வட்டவளைக்கு பயணித்து கொண்டிருந்த வாகன ஓட்டுநர் மீது பேருந்தொன்றில் பயணித்த ஒருவர் வெற்றிலை எச்சிலைத் துப்பியுள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த வாகன ஓட்டுநர், வெற்றிலை எச்சிலை துப்பியவரை கண்டிப்பதற்காக பேருந்தில் ஏறியுள்ளார்.
இதன்போது அவர் ஏறிய பேரூந்து கொரோனா தொற்றாளிகளை ஏற்றிச் செல்கின்ற பேருந்து என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொது சுகாதார அதிகாரிகள் பேருந்தில் ஏறிய வாகன ஓட்டுநரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.