நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம மற்றும் கஹாவத்த பிரதேசங்களில் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய புவிச்சரிதவியல் ஆய்வு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.