ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை இளைஞன் பரிதாபமாக மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்
2549Shares

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள மாடி வீட்டில் வாழ்ந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளளார்.

மொட்டை மாடியில் இருக்கு தவறி விழுந்தமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரோம் வியா காசியா பிரதேசத்தில் தொழில் செய்த நிலையில் வாழ்ந்து வந்த சம்பத் என்ற 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என குறிப்பிடப்படுகிறது.

விழுந்தமையினால் படுகாயமடைந்திருந்த இலங்கையர் ரோம் சங்கமில்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இலங்கையர் மாடி வீட்டில் இருந்து விழுந்த முறை தொடர்பில் மேலதிக விசாரணைகளை காசியோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர் கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.