உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்ற கட்டுநாயக்க விமான நிலையத்தின் முகாமையாளருக்கு கொரோனா

Report Print Vethu Vethu in சமூகம்
277Shares

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தின் பிரதி முகாயைாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த பிரதி முகாமையாளருடன் நெருங்கி செயற்பட்ட மேலும் 15 விமான நிலைய ஊழியர்கள் 15க்கும் அதிகமானோர் இதுவரையில் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் சிலர் அண்மையில் மத்தல விமான நிலையில் உக்ரேன் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய ஊழியர்கள் மேலும் 7 பேர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Like This Video...