இலங்கையில் உள்ள அனைத்து பேருந்து சங்கங்களும் இணைந்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்றகு தீர்மானித்துள்ளன.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அன்ஜன பிரியன்ஜின் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு மூதல் தொடர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து போக்குவரத்தில் ஈடுபடும் ஊழியர்கள் முகம் கொடுக்கும் சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்காமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் கூறும் வகையில் பேருந்துகளுக்காக 4 வீத வட்டியின் கீழ் 3 லட்சம் ரூபாய் கடன் வசதி வழங்குவது உட்பட பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாளர்.
எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் 18ஆம் திகதியில் இருந்து பணி பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.