கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை - 4 பிரிவில் பயணிகள் வர அனுமதி

Report Print Vethu Vethu in சமூகம்
885Shares

எதிர்வரும் 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் நான்கு பிரிவுகள் மூலம் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள், இலங்கை மாணவர்கள், வெளிநாட்டு பணியாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என 4 பிரிவுகளின் கீழ் இலங்கைக்கு அழைத்து வர முடியும்.

விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.