ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று விமானிகளுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் விமானப் பயணங்களை மேற்கொண்டதன் காரணமாக இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கூறியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள மூன்று விமானிகளும் தற்போது புத்தளம் இரணவில் கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இலங்கையில் இதுவரை 46 ஆயிரத்து 248 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள்னர்.
இவர்களில் 39 ஆயிரத்து 23 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 7 ஆயிரத்து 6 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா காரணமாக இலங்கையில் 219 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை உலகம் முழுவதும் 87,640,097 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் இதுவரை 1,890,847 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து 63,131,823 பேர் குணமடைந்துள்ளனர்.