பொகவந்தலாவ மோரா தோட்ட பகுதியில் கொரோனா சிகிச்சை நிலையம் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

Report Print Gokulan Gokulan in சமூகம்
32Shares

பொகவந்தலாவ மோரா தோட்ட பகுதியில் இயங்கி வந்த தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிர்வாகம் இன்று புதன்கிழமையிலிருந்து கொரோனா சிகிச்சை நிலையமாக உத்தியோகப் பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நிகால்வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை முதற்கட்டமாக லிந்துலை, பத்தனை ஆகிய பகுதியிலிருந்து 10தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு வெளிமாவட்டங்களில் இனங்காணப்படுகின்ற தொற்றாளர்களும் இதில் அனுமதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இரண்டாவது கொரோனா அலை காரணமாக கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த காலங்களில் மூன்று நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டன.

அதில் பொகவந்தலாவ மோரா பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட சிகிச்சை நிலையத்தில் மாத்திரம் ஒரே தடவையில் 138 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கமுடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மத்திய மாகாணத்தில் அங்குராங்கத்த கண்டி பொல்கொல்ல, தெல்தெணிய, யக்கல பல்லேகல, ஆகிய பகுதிகளில் கொரோனா சிகிச்சை நிலையம் இயங்கி வருவதோடு மேலும் வலப்பனை மற்றும் கொத்மலை மல்தெனிய , ஆகிய பகுதிகளில் இரண்டு கொரோனா சிகிச்சை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

மத்திய மாகாணத்தில் மாத்திரம் இதுவரையில் 1398கொரோனா தொற்றாளர்கள் இனங்கானபட்டுள்ளனர்.

இதில் நுவரெலியா மாவட்டத்தில் 628,பேரும் மாத்தளை மாவட்டத்தில் 187பேர் என அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு அதிகமானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நிகால்வீரசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.