தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்க பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளன - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Report Print Steephen Steephen in சமூகம்
179Shares

இலங்கையில் PCR பரிசோதனைகளை 20 ஆயிரம் வரை அதிகரிக்க வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ள நிலைமையில், கடந்த இரண்டு வாரங்களில் சில இடங்களில் 10 ஆயிரத்திற்கும் குறைந்த அளவிலான பரிசோதனைகளே நடத்தப்பட்டுள்ளன எனவும் இது குறித்து அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர். கண்டுபிடிக்கப்படாத இடங்கள் உள்ளன. முடியும் அளவுக்கு நோயாளிகளை கண்டறிய வேண்டும் என்பதை நாங்கள் கூறி வந்துள்ளோம். அப்போதுதான் நோயாளிகளை சமூகத்தில் இருந்து வேறுப்படுத்தி வைக்க முடியும். இதற்காக PCR பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கடந்த சில தினங்களில் எந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்பது எமக்கு தெரியாது. ஊடகங்கள் தற்போது இது பற்றி பேசுவதில்லை.

குறைந்தது 20 ஆயிரம் PCR பரிசோதனைகளையாவது நடத்த வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞாப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த சில நாட்களாக அதிகளவில் அந்த பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. 10 ஆயிரத்துக்கும் குறைவான பரிசோதனைகளே கொழும்பில் நடத்தப்பட்டுள்ளன. இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்க குறைந்தளவில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.இப்படி செய்வதால், நாம் மறைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டின் மீது இருப்பது போல் ஆகிவிடும் எனவும் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.