பெற்றோருக்கு இடையிலான வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் 21 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித வித்தானபத்திரன தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்றோர் இந்த 21 குழந்தைகளை வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
எனினும் கடந்த 2020ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோங்கள் மற்றும் சித்தரவதைகள் குறித்து குறைவாக சம்பவங்களே பதிவாகியுள்ளன.
2019ஆம் ஆண்டை விட 2020ஆம் ஆண்டில் சிறுவர்களை தொழில்களில் ஈடுபடுத்தும் எண்ணிக்கையானது 2 வீதமாக குறைந்துள்ளது எனவும் வித்தானபத்திர குறிப்பிட்டுள்ளார்.