கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதால், பொலன்னறுவை கதுருவெல நகரின் ஒரு பகுதி நேற்று மாலை முதல் மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கதுருவெல நகரில் உள்ள பிரதான உணவகங்கள் உட்பட சில வர்த்தக நிலையங்களில் நேற்றைய தினம் மாத்திரம் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டப்ளியூ.கேள் குமாரவங்ச தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களில் மாத்திரம் கதுருவெல நகரில் 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக நகரில் உள்ள பிரதான வீதியின் நடு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து தொற்றாளர்களும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குமாரவங்ச குறிப்பிட்டுள்ளார்.