135 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெல்ஜியத்திலிருந்து விமானத்தபால் மூலமாக இந்த போதை மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 18000 மெதபிடமின் என்னும் போதை மாத்திரைகள் விமான தபால் மூலமாக கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட போதை மாத்திரைகளை சுங்கத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர்.