தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு கொரோனா

Report Print Ajith Ajith in சமூகம்
47Shares

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை இலங்கையின் கோட்டை நீதிவான் நீதிவான் முன் இன்று குற்றப்புலனாய்வுத்துறையினர் முன்னிலைப்படுத்தப்படவிருந்தனர்.

எனினும் கொரோனா காரணமாக அவரை மன்றில் முன்னிலைப்படுத்தமுடியவில்லை என்று அவர்கள் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

ஹிஸ்புல்லாவை இன்று பிற்பகல் 2மணிக்கு மன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அவரது மனைவி, மற்றும் சட்டத்தரணிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் இன்று பிற்பகல் 3 மணியளவில் அவர் மன்றில் முன்னிலைப்படுத்தப்படமாட்டார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஏற்கனவே தடுத்துவைக்கப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை சட்டத்தரணிகள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றுக் கோரி இடைக்கால தடை உத்தரவு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு அதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றமும் அனுமதி வழங்கியிருந்தது.