கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் பலி

Report Print Ajith Ajith in சமூகம்
85Shares

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

1. மீதிரிகல பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான ஆண் ஒருவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொவிட் நோய்த்தொற்று மற்றும் வலிப்பு நோய்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.

2. பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவர், தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொவிட் ,நிமோனியா மற்றும் சிறுநீரக நோய்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.

3. கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் நேற்று வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட், நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்குள் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 46ஆயிரத்து 503ஆக உயர்ந்துள்ளது. 6623பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.