ஒன்பதாவது நாளாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதான வீதிக்கு வரும் பாதைகள் அனைத்தையும் பொலிசார் மூடியுள்ளனர்.
காத்தான்குடி நகரசபைப் பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டத்தை பிரதேச செயலாளர் உ.உதயசிறீதர் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பிரதான வீதியூடாக வாகனப் போக்குவரத்து வழமை போன்று இடம்பெற்று வருகின்ற போதிலும், நகரம் சன நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.