மாஸ் ஹோல்டிங்ஸின் 446 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

Report Print Ajith Ajith in சமூகம்
141Shares

மாஸ் ஹோல்டிங்ஸின் நிறுவனத்தின் கீழ் வரும் தொழிற்சாலைகளில் இருந்து மொத்தம் 446 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

நான்கு தொழிற்சாலைகளில் இருந்து இவர்கள் இனங்காணப்பட்டதாக மாஸ் ஹோல்டிங் தெரிவித்துள்ளது.

நிறுவன அறிக்கையின்படி ஹன்வலையில் உள்ள லீனியா அக்வா தொழிற்சாலையில் இருந்து 154 தொற்றாளிகளும், பாணந்துறை யுனிச்செலா தொழிற்சாலையில் இருந்து 120 தொற்றாளிகளும், துல்கிரிய - துருலியில் இருந்து 123 தொற்றாளிகளும், மற்றும் பல்லேகலையின் கொண்டுர்லைன் தொழிற்சாலையில் இருந்து 49 தொற்றாளிகளும் இனங்காணப்பட்டுள்ளனர்

இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களை சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் பராமரிப்பதாக மாஸ் ஹோல்டிங் நிறுவனம் அறிவித்துள்ளது.