மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

Report Print Saravanan in சமூகம்
90Shares

ஏறாவூரில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் 3 பிரிவு இ மகளீர் பாடசாலை வீதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஜமால்டீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ரயில் தண்டவாளத்தில் வேலைக்கு நடந்து சென்ற போதே ரயிலுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் ,ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதில் உயிரிழந்தவர் வாய்பேச முடியாதவர் எனவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.