அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் கொரோனா தொற்றினால் 46 வயதுடைய ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை,உகன பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கிழக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.