வடக்கில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! விபரங்கள் வெளியாகின

Report Print Murali Murali in சமூகம்
203Shares

வடக்கில் இன்று 11 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, வெளிநாட்டுக்குச் செல்வதற்காக கொழும்பில் தங்கியிருந்து திரும்பிய பூநகரியைச் சேர்ந்த 7 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மருதங்கேணியில் இருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கொழும்பில் இருந்து வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

சங்கானை மற்றும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மருதனார்மடம் கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் இன்று 686 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.