பலாங்கொட நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள ஐந்து பள்ளிவாசல்கள் மீள் அறிவித்தல் வரும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை வயதான குழந்தையொன்றும், 62 வயதான பெண்ணொருவருக்கும் இவ்வாறு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த தொற்றாளர்களுடன் நெருங்கி பழகிய 52 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் விபத்தில் காயமடைந்த ஒன்றரை வயது குழந்தை பலாங்கொட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 62 வயதான பெண்ணுக்கு இரத்தினபுரியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த தொற்றாளிகளுடன் நெருங்கி பழகியவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் வரையில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (08) பலாங்கொட நகரசபைப் பகுதியில் உள்ள குறித்த பள்ளிவாசல்களின் மசூதிகளில் நடத்த திட்டமிடப்பட்ட முஸ்லிம் பிரார்த்தனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.