யாழ். பல்கலைக்கழக வாயிலை மறித்து போராட்டம்! ஸ்தலத்தில் பொலிஸ், இராணுவம், கலகமடக்கும் பொலிஸார்

Report Print Sumi in சமூகம்
378Shares

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரையிலும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

நேற்று இரவு கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி பல்கலைக்கழக வாயிலை மறித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மாணவர்கள், அரசியல்வாதிகள் மட்டும் சமூக ஆர்வலர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தை சூழவும் பொலிஸ், இராணுவம் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இடித்து அழிக்கப்பட்ட நினைவு தூபியை அதே இடத்தில் மீளக் கட்டித்தருமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் பல்கலைக்கழக ஏனைய இடங்கள், அனைத்திற்கும் பாதுகாப்பு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவரை உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் அவருடன் என்ன கதைத்தார்கள் என்பது தொடர்பிலான செய்திகள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

போராட்டக்காரர்கள் மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும், அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு எதிராகவும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பிய வண்ணமுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.