கொரோனா தொற்றாளரான யுவதி தப்பிச் செல்வதை தடுத்த மருத்துவர்கள், ஊழியர்கள் தனிமைப்படுத்தலில்

Report Print Steephen Steephen in சமூகம்
72Shares

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் மனநல மருத்துவப் பிரிவின் 23ஆம் இலக்க விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 23ஆம் இலக்க விடுதியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த யுவதி பாணந்துறையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வருவதுடன், எல்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வருகிறார்.

இந்த யுவதி நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு நடத்திய பி.சீ.ஆர். பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த யுவதி வைத்தியசாலையின் விடுதியிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

மருத்துவர்கள் உட்பட ஊழியர்கள் அந்த முயற்சியை தடுத்துள்ளனர். இந்த நிலையில் யுவதி தப்பிச் செல்வதை தடுத்த மருத்துவர்கள், ஊழியர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.