மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Steephen Steephen in சமூகம்
66Shares

மத்திய மாகாணத்தின் கண்டி,நுவரெலியா,மாத்தளை மாவட்டங்களில் புதிதாக 161 கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இன்றைய தினம் அதிகாலை 6 மணி வரை கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டியில் ஆயிரத்து 637 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். நுவரெலியாவில் 625 தொற்றாளர்களும், மாத்தளையில் 217 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் கண்டி நகர எல்லைக்குள் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவை பிரதேசத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் உக்குவளை பகுதியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.