கொஸ்கொட- கிருல்ல பிரதேசத்தின் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள், கண்டியின் பூஜாபிட்டிய காவல்துறை பிரிவு என்பன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்ட பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் கண்டி மாவட்டத்தில் இதுவரை 1637 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.