முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Theesan in சமூகம்
59Shares

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச்சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர் என்ற சந்தேகத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஊடாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வெளியிடப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் குறித்த நபருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபரை கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கும், குறித்த நபருடன் நேரடித்தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஊழியர்கள் களமிறங்கியுள்ளனர்.