மேல் மாகாணத்தில் அதிகளவில் பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது அந்த மாகாணத்திற்கு வெளியில் உள்ள பிரதேசங்களில் பரவி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்திற்கு வெளியில் பரவும் இந்த கொரோனா வைரஸ் மாறுப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய மேல் மாகாணத்திற்கு வெளியில் வைரஸ் பரவும் வேகம் 50 வீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கேகாலை மாவட்டத்தில் புதிதாக இரண்டு கொத்தணிகள் உருவாகியுள்ளதாகவும் வைரஸ் தொற்றிய முதல் நாளிலேயே தொற்றாளர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படுவதாகவும் ஹரித அளுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.