கொழும்பு நாரஹன்பிட்டியவில் 30பேர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய கொரோனா தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் கொழும்பில் மாத்திரம் நேற்று 148பேர் தொற்றுக்கு உள்ளாகினர்.
இதில் நாரஹன்பிட்டியவில் 30பேரும், பொரல்லையில் 14பேரும், புளுமெண்டலில் 15பேரும் மட்டக்குளியவில் 16பேரும் அவசாவளையில் 22பேரும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை நேற்று மாத்திரம் இலங்கைக்குள் 535 தொற்றாளிகள் இனங்காணப்பட்டனர். இதில் 111 பேர் கண்டியில் இருந்தும் 64 பேர் கேகாலையில் இருந்தும் நாட்டின் ஏனைய இடங்களில் இருந்து 212 பேரும் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டனர்.