சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாது போனால், தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்

Report Print Steephen Steephen in சமூகம்
157Shares

சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாது போனால், சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பது குறித்து தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைக்கும் போது வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிக்காட்டல்கள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் போது ஏதேனும் சிக்கலான நிலைமை ஏற்பட்டால், எந்த சந்தர்ப்பத்திலும் தேவையான ஆலோசனைகளை வழங்க சுகாதார அமைச்சு தயாராக உள்ளது.

சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நடவடிக்கைகளை துறைக்கு பொறுப்பான அமைச்சு முற்றாக கண்காணிக்கும். அத்துடன் வழிக்காட்டல் ஆலோசனைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.