ரவூப் ஹக்கீமுடன் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிய பரிசோதிக்கப்படும் பாதுகாப்பு கமராக்கள்

Report Print Steephen Steephen in சமூகம்
95Shares

கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்துள்ளதால், அப்போது அவருடன் சம்பந்தப்பட்டிருந்தவர்களை கண்டறிய பாதுகாப்பு கமராக்களை பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயத்தை நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த பரிசோதனையில் அடையாளம் காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட ஊழியர்களை தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தனக்கு கொரோனா வைரஸ் தொற்றி உள்ளதாக ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் கடந்த 10 தினங்களில் தன்னுடன் சம்பந்தப்பட்டவர்களை சுகாதார பாதுகாப்புடன் இருக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

ராஜாங்க அமைச்சர் தயாசிறிய ஜயசேகரவும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதுடன் அவருடன் சம்பந்தப்பட்டிருந்த 100இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.