பொரள்ளையில் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன..

Report Print Steephen Steephen in சமூகம்
89Shares

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு பொரள்ளை பொலிஸ் பிரிவில் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கொரோனா பரவல் தடுப்பு மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில் கோதமிபுர தொடர்மாடி வீடமைப்பு தொகுதி, கோதமிபுர 24 இலக்க தோட்டம், 78வது இலக்க தோட்டம் என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாளிகாவத்தை, தெமட்டகொடை மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகள் நாளை அதிகாலை முதல் விடுவிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.