கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், அண்மையில் நாடாளுமன்றத்தில் நெருக்கமாக பழகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரவூப் ஹக்கீமுடன் அன்றைய தினம் நெருக்கமாக இருந்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, தலதா அத்துகோரள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியா இராசமாணிக்கம் ஆகியோரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கெமராக்களை ஆய்வு செய்ததில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்படவுள்ளது.