நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.சிறிசற்குணராஜாவை சந்தித்துள்ளனர்.
இதன்போது யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி உடைப்பு விவகாரம் தொடர்பில் துணைவேந்தர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
“மாணவர்களுக்கு எப்படியான உணர்வுகள் இருக்கிறதோ, இந்த மக்களுக்கு எப்படியான உணர்வுகள் இருக்கிறதோ அதே போன்ற உணர்வுகளோடு தான் நானும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். தூபியை மீண்டும் அமைப்பதற்கான முன்மொழிவை நானே பேரவையிடம் முன் வைக்கிறேன்” என துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.