ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்ட 35 அதிரடிப்படையினருக்கு கொரோனா

Report Print Steephen Steephen in சமூகம்
56Shares

ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 35 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசேட அதிரடிப்படையின் சில அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியமைக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, கடந்த வெள்ளிக் கிழமை அதிரடிப்படையை சேர்ந்த 60 பேருக்கு ரெபீட் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் அதில் இந்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் இந்த கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சைக்காக கந்தகாடு, புணானை மற்றும் களுத்துறை ஆகிய இடங்களில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதிரடிப்படையை சேர்ந்த மேலும் சிலருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.