பிரதமரின் அரசியல் விவகார இணைப்புச் செயலாளருக்கு கொவிட் தொற்று உறுதி

Report Print Kamel Kamel in சமூகம்
34Shares

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் விவகார இணைப்புச் செயலாளர் கமலசிறி ஹெட்டிகேவிற்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கமலசிறி ஹெட்டிகே கடந்த 8ம் திகதி நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவைத்தலைவர் அலுவலகத்தின் பணியாளர்கள் சிலருடன் கமலசிறி ஹெட்டிகே நெருங்கிய தொடர்பு பேணியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட உள்ளனர்.