இலங்கைக்குள் இன்றும் 536 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 44ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 236 பேர் பேலியகொட தொற்று கொத்தணியில் தொடர்புடையவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மேலும் 487 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது.